கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜெயக்குமார், சுகுணா தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (42), பகுதி நேர ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் திருமலை என்பவர், தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி வீடு வாங்கி தருவகாக ரூபாய் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயக்குமார் அப்பகுதி மக்களிடமிருந்து வீடு வாங்கி தருவாக கூறி ரூபாய் 12 லட்சம் வரை பணம் பெற்று திருமலைக்கு கொடுத்துள்ளார்.

இதனிடையே, திருமலை அப்பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஜெயக்குமாரிடம் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திருமலை குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மனைவி சுகுணாவிடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.

தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர், சிகிச்சைக்காக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

69 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close