கோவை மாவட்டத்தில் கொலை, விபத்து இழப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவாக பெற்று தரப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு செய்திக்குறிப்பில் கூறும்போது.

கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குற்றத்தடுப்பு பணிகளில் போலீசார் தீவிரம் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது. அதை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொலை, கொலை முயற்சி, விபத்தில் இழப்பு, விபத்தில் படுகாயம் அடைந்த தாக்குதலில் காயமடைதல் போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நல நீதி பெற்றுத் தருவதில் போலீசாரின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டோர் நல நிதி தொடர்பாக 200க்கும் மேலான விண்ணப்பங்கள் கிடப்பில் இருக்கிறது.

இந்த மனுக்கள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து சட்டத்துறைக்கு அனுப்பினால் தான் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 கொலை வழக்கில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிவாரணத் தொகையாக பெற்றுத்தர முடியும்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதிக்கப் பட்டோர் நல உதவித் தொகை பெரு விண்ணப்பங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ஏப்ரல், மே மாதங்களில் விபத்து குற்ற வழக்குகள் அரிதாக இருந்தது. தற்போது அடிதடி மோதல் தற்கொலை உள்ளிட்ட சில வழக்குகள் வழக்கமான நிலையில் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்ட அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. கொரோனா பரவலைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் 7 பேருக்கு மேல் அமர்ந்து பணியாற்றக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் கூறினாா்.

 38 total views,  2 views today