கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெறுகிறது.

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில்   தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகளை
சமூக ஆர்வலர்  எஸ்.பி.அன்பரசன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்கம், கோவை மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும்; சங்கம் மற்றும் கோவை நேரு கல்வி குழுமங்கள் இணைந்து தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் (சிறார் இளைஞர், சீனியர் மற்றும் ஜுனியர் – Youth, Junior & Senior – Men and Women) பங்குபெறும் பளுதூக்கும் போட்டிகள்  கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வளாகத்தில் துவங்கியது. இந்த போட்டிகள் வரும் 17 – ம் தேதி வரை நடைபெறுகிறது.

தற்போது  நடைபெற்ற துவக்க விழாவில், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார், சமூக ஆர்வலர்  எஸ்.பி.அன்பரசன், புதுச்சேரி மாநில ஸ்போர்ட்ஸ் முன்னாள் கவுன்சில் மெம்பர் .ஜி.குணசேகரன் . கோவை மாவட்ட பளுதூக்கும் சங்க தலைவர் ஜி.கே. செல்வகுமார் . நேரு கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு இயக்குனருமான அ. முரளிதரன், தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் .ஜெ.எம்.பெர்ணான்டோ, ஆந்திரா மாநில கீதனகொண்டா, சிபிஆர் எஜுகேசன் அண்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் .சிபிஆர் பிரசாத் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்க தலைவர் .எஸ்.டி. பொன் செல்வன்,  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

இந்த தென்னிந்திய அளவிலான பளுதுக்கும் போட்டியில் தமிழகத்தில் இருந்து 50 ஆண்களும் 50 பெண்களும் கலந்து கொண்டனர். கேரளாவில் இருந்து இருந்து 25 ஆண்களும் 20 பெண்களும் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் இருந்து 35 ஆண்களும் 30 பெண்களும் கலந்து கொண்டனர். சீமாந்திராவில் இருந்து 30 ஆண்களும் 30 பெண்களும் கலந்து கொண்டனர். தெலுங்கானாவில் இருந்து 25 ஆண்களும் 25 பெண்களும் கலந்து கொண்டனர். பாண்டிச்சேரியில் இருந்து இருந்து 30 ஆண்களும் 25 பெண்களும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நேரு கல்வி நிறுவனங்களின் விளையாட்டு துறை இயக்குனர் செந்தில் பளுதூக்கும் சங்க செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள், நேரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்து இருந்தனர்.

656 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close