கோவை கொடிசியா வளாகத்தில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 346 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கோவை கொடிசியாவில் அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொடிசியா வளாகத்தின் இரண்டாவது அரங்கில் 346 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 746 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள
படுக்கைகளுடன், தலையணை, போர்வை,
துண்டு, குப்பைத்தொட்டி, மின்விசிறி, செல்போன் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் 2777 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1479 பேர் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 500 படுக்கைகளும், அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகளும், கொடிசியாவில் 746 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

 34 total views,  2 views today