கோவை கங்கா மருத்துவமனை இந்திய அளவில் சிறந்த 25வது மருத்துவ மையமாக அங்கீகாரம் பெற்று விட்டது.

0
0

கோவை கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை தர மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டது இந்த மையத்தை அங்கீகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் துவக்கி வைத்தார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கையுடன் துவங்கப்பட்ட கோவை கங்கா மருத்துவமனை மருத்துவமனை இன்று 500 படுக்கை வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருபத்தி ஐயாயிரம் அறுவை சிகிச்சைகளும் 2 லட்சத்திற்கும் அதிகமான புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது. தரமான சேவையின் காரணமாக மருத்துவமனை அங்கீகாரம் பெற்ற சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பால் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 25வது தர மேம்பாட்டு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தர மேம்பாட்டு மையத்தை கங்கா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் அங்கீகாரம் பெற்ற சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிம்ப்ரோ பவுண்டேசன் நிறுவனர் சுரேஷ் லுல்லா, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் மாரியப்பன், சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு உறுப்பினர் டாக்டர் அலெக்ஸ் தாமஸ், கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜசேகரன் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

563 total views, 3 views today