கோவையில் பெண்களுக்கென தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

0
0

கோவையில் பெண்களுக்கென  தென்னிந்தியா அளவிலான கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும்   விளையாட்டு வீரர்களுக்கென பல்வேறு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக கோவை ஊரக கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி அமைப்பு சார்பாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது இன்று முதல் ஆரம்பிக்க பட்டு இறுதி சுற்றாக 31 ஆம் தேதி முடிவடைகிறது.

இதில் கேரளா  ,ஆந்திர பிரதேசம்,கர்நாடக,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 6 அணிகள் கலந்து கொண்டு இன்று விறுவிறுப்பாக ஆட்டத்தை துவக்கினர்.இதில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிக்கு சூழல் கோப்பைகளும், பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது என்று விளையாட்டு துறை ஒருங்கிணைப்பாளர்கள்   தெரிவித்தனர்.

296 total views, 3 views today