கோவை மாவட்டத்தில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பால் மற்றும் மருத்துவம் தவிர்த்து, தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக நாளை மாலை ஐந்து மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை எவ்விதத்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி தேவையின்றி நடமாடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 26 total views,  2 views today