கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடி பொருட்கள் கடத்தல்

கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடி பொருட்கள் கடத்தல்

November 25, 2015 0 By admin

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. போனில் பேசிய மர்ம மனிதன் கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடிபொருட்கள் கடத்துகிறார்கள் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டான்.

ரகசிய தகவலின் அடிப்படையில் மலப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் மற்றும் போலீசார் பெருந்தல்மன்னாவில் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து ஒரு லாரி மின்னல் வேகத்தில் வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டனர். லாரியில் சர்க்கரை மற்றும் வெல்ல மூட்டைகள் இருந்தன. இருப்பினும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே கேபினின் மேல் பகுதியை ஆராய்ந்தனர். அப்போது அதில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ரகசிய அறையில் சோதனை செய்த போது அதில் 3 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 600 கிலோ அம்மோனியம் நைட்ரேட் இருப்பது தெரியவந்தது. ரகசிய அறையில் இருந்த வெடிபொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த ரமேஷ்(வயது 34) என்பவரை கைது செய்தனர். வெடிபொருட்களை கடத்தி வந்ததாக மயிலாடு துைறையைச் சேர்ந்த விஜயராஜன்(30), கரூரைச் சேர்ந்த பழனி(45) ஆகியோரும் கைதானார்கள்.

அவர்கள் கேரளாவுக்கு எந்த இடத்துக்கு வெடி பொருட்களை கடத்திச் செல்கிறார்கள்? என்ன உபயோகத்துக்காக வெடிபொருட்களை கடத்திச் செல்கிறார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

519 total views, 2 views today