கோவையில் சர்வதேச தொழில்துறையினருக்கான இயந்திரம் மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் கண்காட்சியில் 800 கோடி ரூபாய் அளவில் வர்த்தகத்தை எதிர்பார்ப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. கோவையில் 18 வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி இன்டெக்-2019 எனும் தொழிற்கண்காட்சி வரும் ஜூன் மாதம் 6 ந்தேதி துவங்கி 10 ந்தேதி வரை நடைபெற உள்ளது. கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை காஸ்மோபாலிடன் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேசிய கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது , நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும்,குறிப்பாக இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு பதில் பணியாற்றும் வகையிலான ரோபோ, கனரக இயந்தியங்களை தூக்கும் மின் தூக்கி, இயந்திர உதிரி பாகங்களை வடிவமைக்கும் இயந்திரங்கள் மற்றும் உயரமான இடத்தில் பணியாற்றும் நவீன லிஃட் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நவீன உபகரணங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், சுமார் 50,000 பார்வையாளர்களை எதிர்பார்க்கும் இதில் 800 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்…

859 total views, 3 views today