கோவையில் இன்டெக் கண்காட்சியில் எல்.ஜி நிறுவனத்தின் புதிய ஏர் கம்ப்ரஷர் அறிமுகம்

எல்.ஜி எக்யூப்மெண்ட்ஸ் உலகின் மிகச்சிறந்த ஏர் கம்ப்ரஷர் தயாரிப்பில் முன்னணி நிறுனங்களின் ஒன்றாக திகழ்கிறது. 100 நாடுகளில் 20 லட்சம் கம்ப்ரஷர்களை நிறுவியுள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களை மையமாக் கொண்ட எரிபொருள் சிக்கனத்துடன், திறன்மிக்க கம்ப்ரஷரை இன்டெக் 2019 கண்காட்சியில் அறிமுகம் செய்கிறது.

இன்டெக் கண்காட்சியின் ‘பிளாட்டினம்’ பங்குதாராக உள்ள எல்.ஜி, மேம்படுத்தப்பட்ட, புதிய வடிவமைப்பில், பல்வேறு வேகங்களில் செயல்படும், என்கேப்க்கு மற்றும் வெப்பத்தை சேமித்து பயன்படுத்தக் கூடிய ஹீட் ரெக்கவரி சிஸ்டமையை அறிமுகம் செய்கிறது.

பல்வேறு வகையான எல்.ஜி ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஷர் மற்றும் நேரடியாக இயங்கும் பிஸ்டன் உள்ள கம்ப்ரஷர்களும் ஹால் பி, ஸ்டால் எண் 2ல் காட்சிப்படுத்தியுள்ளது. உலக அளவிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள், 626 கண்காட்சியாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதில் இடம் பெறுகிறது.

எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில்,

ஏர் கம்ப்ரஷர்களின் வாழ் நாளில் அது பயன்படுத்தும் எரிபொருள், மின்சாரம் போன்றவை அதன் விலையில் 70 – 80 சத வீதம் செலவை ஏற்படுத்துகிறது. உலக அளவில், எரிபொருள் விலை உயர்வு மட்டுமல்ல, சுற்றுச் சூழலும், காற்றின் தரமும் கூட தொழில் நடத்துவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்ஜி யை பொறுத்தவரை, நாங்கள் கம்ப்ரஷர் வாங்குவோருக்கு சிறந்த எரிபொருள் சிக்கனமும், செயல்திறன் மிக்க, நிலையான பயன்தரும் கம்ப்ரஷர்களை, மதிப்புமிக்க பொருளை தர உறுதியளித்துள்ளோம் என்றார்.

2,711 total views, 3 views today