கோவையில் அ.தி.மு.க சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளையொட்டி 86 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது.

கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளையொட்டி 86 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் விழாவையொட்டி 70 ஜோடிகளுக்கு திட்டமிடப்பட்ட விழாவில் 86 ஜோடிகளுக்கு 70 வகையான சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் கோவையில்  நடைபெற்றது. கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீ்ரசெல்வம் ஆகியோர் நடத்தி வைத்தனர். தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இதில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,திண்டுக்கல் சீனிவாசன்,தங்கமணி,உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் முன்னணித்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

287 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close