கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது.

0
0

கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது. கோவையில் துவங்கியுள்ள அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த எட்டு அணிகள் பங்குபெற்று உள்ளனர்.

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள மைதானத்தில் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பையுமான அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கியது. உள்ளது. வருகிற ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறந்த எட்டு அணிகள் பங்குபெற்று உள்ளனர்.

லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் புது டெல்லி, இந்திய விமானப்படை,  சென்னை இந்தியன் வங்கி அணி  உள்ளிட்ட 8 அணிகள் பங்குபெற்று உள்ளனர்.

அதே போல் பெண்கள் பிரிவில்  கொல்கத்தா கிழக்கு ரயில்வே, திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரியம், சென்னை அரைஸ் தென்னக இரயில்வே அணி, உள்ளிட்ட 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

வருகிற 30 ஆம் தேதி வரை லீக் சுற்றுக்களும் அதன் பிறகு அரையிறுதி இறுதி சுற்றுக்களும் நடைபெற உள்ளது. ஜூன்1 ஆம் தேதி இறுதி சுற்றுக்கள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெரும் அணியினருக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

308 total views, 3 views today