கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.

பேர்ணாம்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜார்ஜ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

முன்னாள் மாணவர் மற்றும் சமூக சேவையாளர் பாஸ்கரன் அவர்கள் 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரிய பயிற்றுனர் நாகராஜ், வனக்குழு தலைவர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தன், ஊராட்சி மன்ற செயலாளர் லதா, நாட்டாண்மை பிரபாகரன், நாட்றம்பள்ளி ஆசிரியர் அருண், காவேரிபாக்கம் தலைமை ஆசிரியர் லதா, கிரீன்வேல்யு பள்ளி தாளாளர் ஆயிஷாபேகம், ZTV தயாரிப்பாளர் பாலமுருகன், PR.சுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இப்பள்ளி ஆங்கில வழி பள்ளியாக இரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து வருகிறது.

இப்பள்ளியில் Projetor வழியாக மெட்ரிக் பள்ளிகள் போல் பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது.

அதே போல் யோகா, கம்யூட்டர் கல்வி, நூலக வசதி, தொலைக்காட்சி வழி கல்வி, தரமான மதிய உணவு வைபை மூலம் இதர பள்ளி மாணவரோடு கலந்துரையாடல், நேரிடை அனுபவக் கல்வி என சிறப்பான வசதிகளை உள்ளடக்திய பள்ளியாக திகழ்கிறது.

பள்ளி விழாவில் பரதம், கிராமிய பாடலுக்கான ஆடல், பாடல், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், நாடகங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் ஆடல் நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

விழாவினை ஆசிரியர்கள் ரேவதி, ரேணுகா ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

710 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply