தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைசேர்ந்தவர் நாசர். இவர் டெல்லி தப்லிக் மாநாட்டுக்கு (இஸ்திமா)சென்று வந்ததாகவும். இவருக்கு சந்தேகத்தின் பேரில் கொரானோ பரிசோத னை செய்ய வேண்டும் என்பதற்க்காக “கா”விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தனி வார்டில் வைத்து மருத்துவபரிசோதனை செய்யபட்டது. மருத்துவ பரிசோதனையில்இன்னும் முழுமையான தகவல் வராதா நிலையில் அவருடைய 53 வயதுள்ள மனைவி நசிப் என்பவர் அருவருடைய வீட்டில் சுகாதாரத் துறையின் விதிகளின்படி தனிமை படுத்தி வைக்கபட்டு இருந்தார் .கணவரை அழைத்துச் சென்றதில் இருந்து அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால்உடனே அவரையும்அவருடைய மகனும் “கா”விலக்கு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்க பட்டுள்ளார்கள்..

இந்த நிலையில் கணவரைத் தொடர்ந்து அவர்களுக்கும் கொரோனா குறித்து மருத்துவ பரிசோதனை செய்யபட்டுள்ளது முறையாக மருத்துவபரிசோதனை இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது .நசிப் அவர்களுக்கு ஏற்கனவே பத்து வருடமாக மூச்சு திணறல் வீசிங் பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு இடையில்.. நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூச்சு திணறல் காரணமாக நசிப் அவர்கள் 1.25 மணிக்கு இறந்துவிட்டார். அரசு மருத்துவமணை மருத்துவகுழு ஆராய்ந்து பரிசோதனை செய்ததில் கொரானோ அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அப்பெண் மூச்சு திணறல் அதிகம் ஆகி மரணமடைந்து விட்டார் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்..

கொரானோ அறிகுறியுடன்மூச்சு திணறல் காரணமாக இறந்து விட்ட நசிப் அவர்களைஅடக்கம் செய்ய போடிநகருக்கு கொண்டு சென்றனர்
இது சம்மந்தமாக உயிரிழந்த நசிப் அவர்களின் உறவினர்களை நமது செய்தியாளர் போனில் தொடர்பு கொண்டு விபரம்கேட்ட போது..

உயிரிழந்தவரின் கணவருக்கு கொரானோ நோய் பரிசோதனை முடிவு வரப்பெறாத நிலையில். நீண்ட நாட்களாக இருந்து வந்தமூச்சு திணறல் காரணமாகவும் .தனது குடும்பத்தையே கொரானோ வைரஸ் பாதித்ததாக தனிமைப்படுத்தியதால் மண உளைச்சல் ஏற்பட்டுஉயிரிழந்ததாகவும் நசிப் அவர்கள் கொரானோ வால்தான் இறந்தார் என சிலர் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும். அதே போல் சுகாதாரத்துறை சார்பில் மூச்சு திணறல் ஏற்பட்டு தான் இறந்தார் என்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்கள் என்றும் சிலர் இவ்வாறு தவறான தகவலை பரப்பப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர்….

கொரானோ வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நசிப் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கிறது

144 total views, 3 views today