கொடைக்கானல் நகராட்சிக்கு செந்தமான 1 வது வார்டில் நாயுடுபுரம் ( பாக்கியபுரம்) என்ற பகுதியில் சுமார் 500 க்கும் மேல் உள்ள குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் கடந்த 6 மாத காலமாக மின் கம்பம் உடைந்து உள்ளது. அவ்வப் போது மின்சாரம் கசிந்து வருகிறது…இது இப்பகுதியின் பொது மக்களுக்கு மிகப் பயமாகவும்,அச்சுறுத்தலாகவும் உள்ளது. பல முறை கொடைக்கானல் மின்சாரத்துறையிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை எடுக்க வில்லை.
எந்த உயிர் சேதமும் ஏற்படுவதற்கு முன்னால் மின்சாரத்துறை தலையிட்டு மின்கம்பம் மாற்றி பொதுமக்களின் அச்சுறுத்தலை போக்கும் படி கேட்டு கொள்கிறோம்…என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 576 total views,  1 views today