திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயன்டபூங்காவில் வரும் 20.05.2017 முதல் 29.05.2017 வரை கோடைவிழா நடைபெறும் எனவும் இதில் முக்கியம்சமாக மலர் கண்காட்சி 20.,21 ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் வேளாண்துறை அமைச்சர்
சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கு பெறுகின்றனர். 20.05.2017 முதல் 29.05.2017 வரை நடைபெறவுள்ள கோடை விழா மற்றும் மலர் கணக்காட்சியினை சிறப்பிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு விழா குழுவின் தலைவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் சார்பாகவும் கோடைவிழா குழுவின் சார்பாகவும் கேட்டு கொள்ளப்படுகிறது

வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பலவண்ண மலர்கள் தற்பொழுது பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடை ரஜினி
கொடைக்கானல் செய்தியாளர்

 421 total views