கொடைக்கானலில் இரண்டாம் ஆண்டு சுழற்கோப்பை கைப்பந்து போட்டி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 12 வது வார்டு விளையாட்டு மைதானத்தில் சன்லயன்ஸ் கிளப் மற்றும் கைப்பந்துக்குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு சுழற்கோப்பை கைப்பந்து போட்டியை கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மற்றும் சன்லயன்ஸ் கிளப் டாக்டர் டி.பி.ரவீந்திரன் துவக்கி வைத்தனர்.

இன்று போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசான பிரமாண்ட சுழற்கோப்பை மற்றும் ரூ 10,000 கொடைக்கானல் கோவில்பட்டி டீம் வென்றது இரண்டாம் பரிசு சுழற்கோப்பை மற்றும் ரூ 7,000 கொடைக்கானல் வாலிபால் கிளப் மற்றும் மூன்றாம் பரிசான சுழற்கோப்பை மற்றும் ரூ 5,000 கொடைக்கானல் வாலிபால் கிளப் மற்றும் நான்காம் பரிசான சுழற்கோப்பையும் ரூ 1000 கொடைக்கானல் வாலிபால் கிளப் பரிசுகளை மாவட்ட துணை கண்கானிப்பாளர் (DSP) மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் (DSO)நகராட்சி ஆணையாளர் மற்றும் வட்டா்சியர் கொடைக்கானல் வாலிபால் கிளப் நிர்வாகிகள் ரவிசந்திரன் ஜான் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு பரிசுகளை தந்தனர்.

இதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் டி. பி.ரவீந்திரன் சன்லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் 12 வது வார்டு பொதுமக்கள் சங்கம் சார்பாக வார்டுக்குள் உள்ள ஒரு காலியிடத்தை வாங்கி அதில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடைக்கானல் கைப்பந்து போட்டி தாலுகா அளவிளான போட்டி நடத்தப்பட்டு 12 வது வார்டு சார்பாக பரிசுகளை தருகின்றோம் என்றார்

கோடை ரஜினி
கொடைக்கானல் செய்தியாளர்

535 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close