கொடைக்கானலில் அடிப்படை வசதி இல்லாதனால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி சத்யா காலணியில் குப்பை தொட்டி இல்லை கழிப்பிட வசதியும் இல்லை குப்பை தொட்டி இல்லாதனால் பொதுமக்கள் வீட்டின் அருகே கொட்டியதால் நோய் பரவும் மலம் ஜலம் இரண்டுமே பொது கழிப்பிடம் இல்லாதனால் சாலையில் கழிக்கின்றனர்

இதனால் உடனடி தொற்று நோய் பரவும் அபாயம் இவர்களுக்கு குடி தண்ணீர் கூட சரியாக வருவதில்லை காரணம் கினறு இருந்தும் மோட்டார் இல்லை கையில் வாளிவைத்துதான் இரைக்கவேண்டும் இதன் அருகே வில்பட்டி அரசினர் உயர் நிலை பள்ளியும் இருக்கிறது இதன் அருகே குப்பைகளை பொதுமக்கள் குப்பை தொட்டி இல்லாதனால் இங்கு தான் கொட்டுகிறார்கள்

இதில் பள்ளி குழந்தைகள் தங்கும் விடுதி அருகே துர்நாற்றம் வீசுகிறது இதை ஊர் பொதுமக்கள் பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று நேரிலும் மனுவாகவும் சொல்லியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் கூடிய விரைவில் பஸ் மறியலும் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் முற்றுகை போராட்டம் நடத்துேவாம்

எனவே மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகமும் மாவட்ட ஆட்சி தலைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது வில்பட்டி சத்யா காலணி ஊர் பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் செய்தியாளர்
கோடைரஜினி

352 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close