கொங்கு கிராமியத்து மட்டனு குழம்பு

0
0

கொங்கு கிராமியத்து மட்டனு குழம்பு

தேவையான பொருட்கள்;
மட்டன் – அரைக்கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரைடீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் – ஒன்னரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
நறுக்கிய மல்லிக்கீரை – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய புதினா – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3- 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

அரைக்க:
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4-6
பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டீஸ்பூன்
நைசாக அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை

1. முதலில் கறியை கொழுப்பு,சவ்வு நீக்கி நன்கு 3-5 தண்ணீர் வைத்து அலசி தண்ணீர் வடிகட்டவும்.பின்பு அத்துடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,மஞ்சள் தூள்,தயிர்,தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.

2 குக்கரில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,வெங்காய்ம் சிவந்து விடக்கூடாது.

3.மீதியுள்ள இஞ்சி பூண்டுபேஸ்ட்,கரம்மசாலா சேர்க்கவும்,சிம்மில் வைத்து அடி பிடிக்காமல் வதக்கவும்.அத்துடன் மல்லி புதினா சேர்க்கவும்.

4.நறுக்கிய தக்காளி,முழுதாக பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.வதக்கிய பின்பு கறியை சேர்த்து நன்கு பிரட்டவும்.

5.அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்.சீரகத்தூள் சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி அடுப்பை மீடியமாக வைத்து குக்கரில் ஐந்து விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.

6. பத்து நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். கறி வெந்து இப்படி காணப்படும்.

7.அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் 1-2 கப் சேர்க்கவும்.

8.கொதி வரட்டும், தேங்காய் வாடை மடங்கட்டும்.

9.மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலெழும்பி வரும். இப்பொழுது கறிக் குழம்பு ரெடி.

10. ரெடியான மட்டன் குழம்பை வெறும் சோறு,நெய்ச் சோறு,சப்பாத்தி,பரோட்டா,ஆப்பம்,தோசை,இட்லி இவற்றுடன் சேர்த்து விருப்பம் போல பரிமாறலாம்.

11.தேங்காய் சேர்க்க விருப்பமில்லதவர்கள் அப்படியே தேங்காய் விடும் முன்பு கறியில் ஊறியிருக்கும் தண்ணீரை சுண்ட வைத்து இப்படி கூட்டுடனும் பரிமாறலாம்.கூட்டு திக்காக ஒரு அரை டீஸ்பூன் அரிசிமாவு அல்லது கார்ன்ஃப்லோர் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.

12.காஷ்மீரி சில்லி பவுடர் உபயோகித்தால் காரம் குறைவாகவும், கலர் அருமையாகவும் இருக்கும்.காரம் மட்டும் அவரவர் விருப்பம்.

13.கறிமசாலா உபயோகிப்பவர்கள் மிளகாய்த்தூளுடன், தனித்தனியாக மசாலா தூள் சேர்க்காமல் ஒரு டேபிள்ஸ்பூன் கறிமசாலா சேர்த்தும் குழம்பு வைக்கலாம்.

14.நான் ஏலம்,பட்டை,கிராம்பை எப்பொழுதும் முழுதாக உபயோகிப்பதில்லை,தூள் செய்து தான் போடுவேன்.விரும்புபவர்கள் முழுதாகவும் உபயோகிக்கலாம்.

15 முந்திரி பருப்பு சேர்ப்பது குழம்பின் கெட்டித்தன்மைக்கும் ருசிக்கும் தான்.முந்திரிப்பருப்பு சேர்க்க விருப்பமில்லதவர்கள் 1 டீஸ்பூன் அரிசிமாவை தேங்காயுடன் கரைத்தும் விடலாம்.எங்க ஊரில் இதனை கூட்டு சேர்ப்பதுன்னு சொல்லுவாங்க.

இந்த முறையில் செய்தால் மட்டன் குழம்பு அருமையாக இருக்கும்.

1,483 total views, 3 views today