கூட்டுறவு தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக பா.ம.க வினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்

கூட்டுறவு தேர்தல் நான்கு கட்டமாக நடத்த தமிழக திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு தேர்தலில் போட்டியிட விரும்புவோரின்  வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்பட்டு வருகிறது.

இதனிடயே, சேலத்தில் பா.ம.க வினர், மாவட்ட ஆட்சிதலைவர் ரோஹிணியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டுறவு தேர்தலில் மாற்று கட்சியினர் வேட்பு ,மனு தாக்கல் செய்யாதபடி, கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் அல்லாத ஆ.தி.மு.க வினர் வேட்பு மனு தாக்கல் செய்வது போல, நீண்ட வரிசையில் நிற்பதாக புகார் தெரிவித்தனர். கூட்டுறவு தேர்தல் நேர்மையாக ஜனநாயக ரீதியில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் புகார் அளித்தனர்.

கூட்டுறவு தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என்றால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுகொண்டனர் .

மீடியா7 செய்திக்காக
சேலம் மாவட்ட செய்தியாளர் வினோத் குமார்

 425 total views,  2 views today