குவைத் காயிதெ மில்லத் பேரவையின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம்

 

காயிதெ மில்லத் பேரவையின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் அய்யம்பேட்டை முஹம்மது பாரூக் கிராஅத் ஓதி துவக்கி வைக்க, பேரவையின் பொதுச்செயலாளர் வடக்கு மாங்குடி அப்துல் முத்தலிப் வரவேற்புரை நிகழ்த்த, பேரவையின் தலைவர் கம்பளி முஹம்மது பஷீர் துவக்கவுரையுடன் தொடங்கியது.

பேரவையின் பொருளாளர் கோட்டக்குப்பம் ஹபீப் ரஹ்மான், மற்றும் நிர்வாகிகள் காரைக்கால் ஆரிப் மரைக்காயர், கோட்டக்குப்பம் ஜைனுதீன், சாதிக், அய்யம்பேட்டை அப்துல் ஜப்பார், முஹம்மது ஹுசைன், ராஜா முஹம்மது, அப்துல் அலீம், சுலைமான் பாட்சா, புத்தாநத்தம் முஹம்மது நாசர், முஹம்மது பந்தர் சிராஜுதீன், வடக்கு மாங்குடி முஹம்மது ஆரிப், சாஹுல் ஹமீது, சோழபுரம் ஜஹீருதீன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

நிர்வாகிகள் அனைவர்களின் ஒருமித்த கருத்துடன் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.
மாநில துணைத் தலைவரும், மாநில செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் இஸ்மாயில் அவர்களின் தகப்பனார் “ஜம் ஜம்” பதுருதீன் ஹாஜியார், தாய்சபையின் வரலாற்று பொக்கிஷம்” அய்யம்பேட்டை ஆலிமான் ஜியாவுதீன், தாய்சபையின் மாநில முதன்மைத் துணைத்தலைவர் முனைவர் M.அப்துல் ரஹ்மான் M.A., Ex M.P., அவர்களின் சிறிய தாயார் முத்துப்பேட்டை ரசூல் பீவி ஆகியோரின் மறைவுக்கு, பேரவை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

2.
பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மத்திய பாசிச பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கும் முஸ்லிம் விரோத மசோதாவை எதிர்ப்பதோடு, நம் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தை பாதுகாக்க, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் ஆலோசனைகளைகளுடன் அவர்களின் அனைத்து செயல்பாட்டிற்கும், தாய்சபையின் வழிகாட்டுதலுடன் பேரவை தனது ஆதரவை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் காலங்கடத்தி வஞ்சிக்கும் மாநில அரசின் செயலை கண்டித்தும், உனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் பேரவை கேட்டுக் கொள்கிறது.

4.
உச்ச நீதிமன்ற அறிவிப்புக்கு இணங்க 6 மாத கால அவகாசத்திற்குள் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் மௌனம் காக்கும் மத்திய அரசையும், காவிரி டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசையும், மத்திய அரசுக்கு துணைபோகும் மாநில அரசையும் கண்டிப்பதோடு, உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை பேரவை வலியுருத்தி கேட்டுக் கொள்கிறது…

5.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தூத்துக்குடி “ஸ்டெர்லைட்’ ஆலையை உடனே மூடவேண்டும் எனவும்,
காவிரி டெல்டா மற்றும் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அமைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்து, தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனே நிறுத்தவேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளை பேரவை கேட்டுக்கொள்கிறது…

6.
குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப பேரவையின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றிருக்கும் தாய்சபையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆலோசகர் மற்றும் முன்னாள் நிர்வாகியான, முறையே காரைக்கால் ஆரிப் மரைக்காயர், சத்திரமனை ஹசன் முஹம்மது, முஹம்மது பந்தர் சிராஜுதீன், சக்கராப்பள்ளி அப்துல் முஹம்மது (தம்பி துரை), சென்னை ஷாஹின்ஷா கான் மற்றும் அனைத்து நிர்வாகிகளின் பணிசிறக்க பேரவை வாழ்த்துகிறது…

7.
குவைத் காயிதெ மில்லத் பேரவையின் நிர்வாகிகளான தலைவர் கம்பளி முஹம்மது பஷீர் அவர்களையும், பொதுச்செயலாளர் அப்துல் முத்தலிப் அவர்களையும் தாய்சபையின் தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்த மரியாதைக்குரிய தேசியத் தலைவர் K.M.காதர் மொஹிதீன் M.A., Ex M.P., மாநில முதன்மை துணைத்தலைவர் முனைவர் M.அப்துல் ரஹ்மான் M.A., Ex M.P., மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித்தலைவருமான K.A.M.முஹம்மது அபுபக்கர் B.Sc., M.L.A., மாநில பொருளாளர் M.S.A.சாஜஹான் மற்றும் நிர்வாகிகள் அனைவர்களுக்கும் பேரவை நன்றிதனை தெரிவித்து கொள்கிறது…

8.
பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மணிச்சுடர், பிறைமேடை பத்திரிக்கைகளுக்கு சந்தா சேர்த்தல் குறித்து விவாதிப்பட்டது.

9.
ஏப்ரல் மாத இறுதியில் பேரவையின் கருத்தரங்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக பேரவையின் துணைச்செயலாளர் திருமங்கலக்குடி அப்துல் ரஹீம் நன்றியுரையுடன் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

147 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close