குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

0
0

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை ,மேக்கரை, வடகரை, புளியரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் மெயினருவி,பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது

72 total views, 3 views today