கும்பகோணம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்று 20-01-2020 இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக
கும்பகோணம் உட்கோட்டத்தில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்களைத் தடுக்கும்
பொருட்டு கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவுடி கும்பகோனாம் தாலுக்கா
காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், உட்கோட்ட குற்றத் தடுப்பு உதவி
ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்ததில்
20,01,2020 அதிகாலையில் வளையப்பேட்டை ரவுண்டான அருகில் இருசக்கர வாகனத்தில்
முகமுடி அணிந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 1) அலெக்ஸ் (22), தபெ, அமுல்தாஸ்,
பாதகோவில் தெரு, அம்மாபேட்டை பை-பாஸ், பேலசத்திரம், தாராசுரம், 2) முகோல் (20), த/பெ,
முருகன், வளையபேட்டை அக்ரஹாரம், தாராகரம், 3) ஜெகதீஸ் (20), த/பெ. உலகநாதன், குடியான
தெரு, அம்மாபேட்டை, 4) அடால்ட் ஹிட்லர் (19), த/பெ. ஆளஎப்ட்ராஜ், மிஷள் தெரு, தாராசுரம்
ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி
ஆகியவற்றை கைப்பற்றியும் செல்போள், பணம் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய
விசாரணையில் இவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் வேலை செய்து வருவதாகவும்
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்து வழிப்பறி சம்பவத்தில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்னர். இவர்கள் கொடுத்த தகவலின்படி இவர்களது கூட்டாளிகளான
மேலும் இருவரை உட்கோட்ட தனிப்படையில் தேடிவருகின்றனர். வழிப்பறி சம்பவத்தில்
ஈடுபட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.

1,799 total views, 3 views today