கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கையெழுத்து முகாம்

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், பொள்ளாச்சி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுங்குற்றவாளிகளையும், அதற்கு துணை நின்ற ஆளும் அரசியல் அதிகாரவர்கத்தையும் கைது செய்து முறையான விசாரணை நடத்தி உடனடியாக தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி கையெழுத்து பெறும் முகாம் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி ,சங்கராகலை அறிவியல் கல்லூரி யில் மாணவர்களை ஒருங்கிணைத்து இன்று நடைபெற்றது

இதில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்ததுடன் குற்றவாளி களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் கல்லூரிமாணவர் அமைப்பினர் ஒன்றினைந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக கூறினர்

இந்நிகழ்ச்சியில் திமுக மாணவரணி இணை செயலாளரும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசுரம் வழங்கி ஆர்பாட்டத்தை துதவங்கிவைத்தார் மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் குடந்தை விக்னேஷ் அசோக் மணிவர்மன் தேவவராஜ் தினேஷ் மணிவண்ணன் மற்றும் கல்லூரி மாணவகள்கலந்து கொண்டனர்

1,677 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close