கும்பகோணம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

திருப்பனந்தாள் அருகே சோழபுரம் மேலே மராயம் சின்னத்தம்பி மகன் கணேசன் வயது 35 விவசாயி .

கணேசன் மீது அதே பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகன் கொளஞ்சி என்பவர்  துக்க நிகழ்ச்சியில் மனைவியை அடித்து விட்டதாக கணேசன் மீது கடந்த 3 தேதி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கணேசன் சோழபுரம் கடைவீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார் அப்போது மூன்று நபர்கள் திடீரென கணேசன் மீது தலை இடது கை மற்றும் முதுகு பகுதியில் அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்த்தனர்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் கணேசன் கொளஞ்சி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர்.

 புகாரின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

66 total views, 3 views today