கும்பகோணம் அருகே மருதாநல்லூர் ஊராட்சியில் கஜா புயலின் போது விழுந்த மரங்களை அகற்ற குடியிருப்புவாசிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ளது கிரின் உட்ஸ் நகர். இந்த நகரில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த கஜா புயலின்போது இந்நகரில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு முறிந்து சாய்ந்தன. அப்போது நகருக்குள் செல்ல வழி இல்லாமல் சாய்ந்து கிடந்த மரங்களை அங்கு வாழும் குடியிருப்புவாசிகளே முன்னின்று அப்புறப்படுத்தி ஓரமாக அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் அம்மரங்கள் நகரின் சாலையோர பகுதியில் இருந்ததாக கூறி மருதாநல்லூர் ஊராட்சி செயலாளர் மரங்கள் அரசுக்கு சொந்தமானது அதை யாரும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் புயல் தாக்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட நகரில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றாமலும் , அம்மரங்களை உரிய முறையில் ஏலம் விடாமலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் ,ஆங்காங்கே கிடக்கும் மரங்களில் அதிக அளவிலான பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பதாகவும் ,இதனால் நகரில் வசிப்பவர்கள் அச்சம் அடைந்து வருவதாகவும் கூறுகின்றனர். ஆகையால் உடனடியாக கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மரங்களை ஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1,661 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close