கும்பகோணத்தை அடுத்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் ;

தஞ்சை மாவட்டம் :

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த காமகோடி இவருடைய மகன் விஜயகுமார் ( வயது 25) கட்டிட மேஸ்திரி இவருக்கும் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் மெயின்ரோடு தெருவை சேர்ந்த முத்துச்சாமி இவருடைய மகள் சௌந்தர்யா ( வயது 19 ) BA ஆங்கிலம் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

விஜயகுமாருக்கும் சௌந்தர்யாவுக்கும்
காதல் மலர்ந்தது திருமணம் செய்துத நிலையில் இருவரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் 19.08.2017 அன்று திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M. குணசேகரனிடம் சௌந்தர்யா கூறியதாவது எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு வேண்டி மற்றும் திருமணம் செய்து வைக்கும்படி
புகார் தெரிவித்தார்.

இப்புகாரை விசாரித்த திருவிடைமருதூர் உதவி ஆய்வாளர் திரு. M. குணசேகரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. V. ஞானசேகரன் அவர்கள் இரு வீட்டாரையும் அழைத்து விசாரனை மேற்கொண்டு

விஜயகுமார் அவரது மனைவி சௌந்தர்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து எந்த வித பிரச்சினை ஏற்படாத வகையில் திருவிடைமருதூர் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்

மீடியா 7 செய்திக்காக
தஞ்சை மாவட்ட ஒளிப்பதிவாளர் தீனா

 5,960 total views