கும்பகோணத்தில் வெளி மாநில சாராயம் விற்ற நபர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 1.9.2018 சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சத்யன் மற்றும் ராஜமோகன், வேல்முருகன் இளநிலை உதவியாளர் டெஸ்கோ.மத்திய புலனாய்வு பிரிவை சேர்ந்த காவலர் பார்த்திபன் மற்றும் கும்பகோணம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் ,
மதுவிலக்கு காவலர்களுடன் இணைந்து

https://media7webtv.in/wp-content/uploads/2018/09/IMG-20180903-WA0023.jpg

கும்பகோணம் பாலக்கரை பெருமாண்டி ரோட்டில் பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கண்ட தஞ்சை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் காவல்துறையினர் கண்காணித்த போது அங்கு கும்பகோணம் வேதவினாயகர் தெருவைச் சேர்ந்த தனபால் மகன் அருண்குமார் வயது 27 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாண்டிச்சேரி மாநில 85 மது பாட்டில்கள் மற்றும் எரிசாராயம் 55 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

651 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close