கும்பகோணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வேளாக்குடி தெருவில் வசித்துவரும் சையது மகன் அசரப் அலி இவர் கடந்த 17-03-2020 தேதி கும்பகோணம் ஆள்வான் கோவில் தெரு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அப்போது எதிரே வந்த மூன்று நபர்கள் வழிமறித்து தாக்கி அவரிடமிருந்து ரூபாய் 5750 மற்றும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். அதைபோல் கும்பகோணம் பெரும்பாண்டி சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவரையும் வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பிடுங்கி சென்றனர் இந்த இரு சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது விசாரணையில் தாராசுரத்தில் சேர்ந்த ஜெகன், மணிகண்டன், அலெக்ஸ், ஆகியோர் தனிப் படை காவலர்கள் கைது செய்தனர் பின்னர் கும்பகோணம் நீதிமன்ற நடுவர் விடுதியில் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

75 total views, 3 views today