கும்பகோணத்தில் ரேஷன் கடை சாப்பாட்டு அரிசியில் புழுக்கள் பொதுமக்கள் புகார் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட வழங்கல் பகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் மேலக்காவேரி சாவடி தெருவில் ரேஷன் கடை அமைந்துள்ளது இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை பெற்று பயன்படுத்தி வந்தனர்

இந்நிலையில் இப்பொழுது கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசல் அருகே உள்ள சாவடி ரேஷன் கடையில் சாப்பாட்டிற்கு வழங்கக்கூடிய அரிசியில் புழுக்கள் மிகுதியாக இருக்கிறது இதனால் உலகமெங்கும் வைரஸ் மற்றும் காய்ச்சல் பரவி வரும் இந்த நேரத்தில் தமிழக அரசே புழுக்கள் உள்ள அரிசியை வினியோகிப்பது கண்டனத்துக்குரியது என கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதனால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் அரிசி வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு அன்றாட கூலி வேலை செய்யும் பொதுமக்கள் ரேஷன் அரிசி சுகாதாரமற்ற புழுக்கள் நிறைந்த அரிசியை வாங்கும் நிலை நிலவி வருகிறது

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலக்காவேரி சாவடியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்து புழுக்கள் உள்ள அரிசியை அப்புறப்படுத்தி சுத்தமான ரேஷன் அரிசியை மக்களுக்கு உடன் வழங்க வேண்டும் என கும்பகோணம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது

மீண்டும் இப்பிரச்சனை தொடர்ந்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்

351 total views, 3 views today