கும்பகோணத்தில் மனித சுவர் எழுப்பி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் குடியுரிமை சட்ட திருத்தம, குடியுரிமைப் பதிவேடு அமலாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

கும்பகோணம் பகுதியில் சென்னை முதல் குமரி வரை இணைக்கும் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஓய்வூதியர் சங்கம் மாதர் சங்கம் வர்த்தக சங்கம் குடியுரிமை எதிர்ப்பு ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

கும்பகோணத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் நகர செயலாளர் கே செந்தில் குமார் ஜமாத்தார்கள் மக்கள் சபை மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ் மன்பயி கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமர்தம் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சு கல்யாணசுந்தரம் குடந்தை எம்எல்ஏ அன்பழகன் மனிதநேய மக்கள் கட்சி முகமது செல்லப்பா ராஜ் முஹம்மது இந்திய காங்கிரஸ் கட்சி டிஆர் லோகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது யாசீன், எஸ்டிபிஐ குடந்தை இப்ராஹிம் இந்திய தவ்ஹீத் ஜமாத் ரஹமத்துல்லா திராவிடர் கழகம் கௌதமன் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இமாம் அலி மக்கள் அதிகாரம் ஜெயபாண்டியன் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

 745 total views