கும்பகோணத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் விபத்தில் மரணம்

0
0

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் வட்டம் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும்
துரைராஜ் மகன் பாலகுரு வயது 45 என்பவர் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருகிறார் இன்று காலை செய்தி சேகரித்து விட்டு கும்பகோணம் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது செட்டி மண்டபம் பைபாஸில் அதி வேகமாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்து விரைந்து வந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

588 total views, 6 views today