கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 71 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது

 இவ்விழாவிற்கு சுதந்திரதின போராட்ட வீரரும் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு தேசியக் கொடியை ஏற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் ஆகியவைபாதுகாக்கப் படவேண்டும் 

மதசார்பற்ற நாட்டில் மதங்கள் கலக்கக்கூடாது இந்தியாவில் ஏழு பெரிய மதங்கள் பழமொழிகள் ஒன்றிணைக்கப்பட்ட நாடுதான் நமது இந்தியா 

இந்தியாவில் மதம் என்பது தனியுரிமை  ஆனால் மத்திய அரசு மதசார்பற்ற விட்டு விட்டு மத சார்பில் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது 

இந்திய நாடு என்பதை விட்டுவிட்டு இந்து நாடு என்பதை வலியுறுத்தி வருகிறது  அரசியலமைப்பு சட்டத்தை மதித்து 130 கோடி இந்தியர்கள் உலகத்திலேயே அதிக அளவில் வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இந்தியர்களே எனவே இந்தியாவில் மதம் வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் லெனின் மாவட்ட செயலாளர் பாரதி நகர செயலாளர் தமிழழகன் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் லோகநாதன் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

99 total views, 6 views today