குமரி மாவட்டம் தாழக்குடி பேருராட்சிக்குட்பட்ட  வீரநாராயணமங்கலம் பழையாறு  கரையில்மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு .

குமரி மாவட்டம் தாழக்குடி பேருராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் பழையாறு கரையில்மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு .

February 12, 2018 0 By Thamimun ansari

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா தாழக்குடி பேருராட்சிக்குட்பட்ட
வீரநாராயணமங்கலம் பழையாறு கரையில்மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு .

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா தாழக்குடி பேருராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் பழையாறு கீழ் கரையில் ஒக்கி புயலின் போது ஏற்பட்ட பல மரங்கள் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து இல்லாமல் போனது.

இச்சாலை முழுக்க முழுக்க விவசாய தேவைக்கு மட்டும் பயன்படும் சாலை என்பது குறிப்பிடதக்கது.
இச்சாலை வழி அடைக்கப்பட்டதால் வயல்களுக்கு உரம் மற்றும் இடுபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் பல சமூக விரோத செயல்களுக்கு இது உகந்ததாக உள்ளது.

மேலும் இன்னும் சில நாட்களில் இப்பகுதியில் நெல் அறுவடை துவங்க இருப்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுமா? என்பது விவசாயிகள் புகாராய் உள்ளது.

மீடியா 7 செய்திகளுக்காக சிவம்

787 total views, 2 views today