குன்னூர் தமிழ்நாடு அரசு பட்டுவளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் தமிழ்நாடு அரசு பட்டுவளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாநில திட்டத்தி கீழ் 2017  – 2018 ஆம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் பட்டு வளர்க்கும் 7 விவசாயிகளுக்கு மானியமாக 4,83,875  ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா வழங்கினார். மேலும் பட்டு வளர்ப்பு தொழிலில் பிற்பட்டடுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு விவசாயிக்கு 52,500 ருபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது  குன்னூர் பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் டி.பாலசுப்ரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

91 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply