குடியாத்தம் 3-12-2017 *அரசு பள்ளியில் 2018 புத்தாண்டு கொண்டாடிய நரிகுறவ மாணவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு, , வட்டம் பத்தலபல்லி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பள்ளியில் நரிகுறவர் மாணவர்களை ஊக்கப்படுத்த 2018 ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

நரிகுறவ மாணவர்களை கொண்டு கேக் வெட்டி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான இந்த புத்தாண்டு விழா வகுப்புகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி. சு.சுமதி , ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மணிசேகர்,திருமதி. பைரவி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு புத்தாண்டை கொண்டாடி இனிப்பு வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்

குடியாத்தம்
உமாசங்கர்

 614 total views