வேலூர் மாவாட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக குடியாத்தம்  அடுத்த மோடிக்குப்பம் பகுதியில் ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால்  அங்கு பயிரிடப்பட்டிருந்த அதிக அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியது.  குறிப்பாக பரமேஸ்வரி, கிருஷ்ணன். உள்ளிட்ட 5க்கும் மேற்ப்பட்டோர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வேற்கடலை முழுவதுமாக மழை வெள்ளத்தில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகவும் மன வேதனையில் உள்ளனர். வேற்கடலை செடிகள் அழுக தொடங்கியதால் பயிரிடப்பட்ட அளவிற்க்கு ஏற்ப்ப சுமார் 50, ஆயிரம் முதல் 1.50. இலட்சம் வரை நட்டம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அதே பகுதியை  சேர்ந்த மணி மற்றும் வேனு கோபால் உள்ளிட்ட சில விவசாயிகள் நெல் பயிரிட்டு அந்த பயிர்கள் முழுவது தண்ணீரிள் சுமார் 8 ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியும் தண்ணீரின் வேகத்தில் அடித்து சென்றதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள ஆற்று கால்வாய்களை முறையாக தூர்வாரி இருந்தால மழை வெள்ளம் விவசாய நிலத்திற்க்குள் புகுந்திருக்காது எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டும்  கூறுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள காணாறுகளை  துர்வாரி மழை நீர் தடையில்லாமல் செல்ல வழி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே.உமாசங்கர்

 815 total views,  2 views today