குடியாத்தம் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா.

குடியாத்தம் கேலக்ஸி ரோட்டரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது
விழாவிற்கு சங்கத் தலைவர் எம்.கோபிநாத் தலைமை தாங்கினார்.

ஸ்கூல் டூ ஸ்மைல் தலைவர் எஸ்.எஸ். ரமேஷ்குமார் வரவேற்றார். பள்ளிக்கல்வி ஓய்வு பெற்ற இயக்குநர் ஏ.சங்கர் , அரசு வழக்கறிஞர் கே.எம். பூபதி , முன்னால் தலைமையாசிரியர் டி.எஸ்.விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஜோதி வசந்திராணி, மற்றும் கனவு ஆசிரியர் விருது பெற்ற , ப.கார்த்தி ஆசிரியர் செம்மல் விருது பெற்ற குடியாத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பி.வசந்தி ஆகியோரை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எஸ். மார்ஸ் பாராட்டி சிறப்புச் செய்தார் 10 ஆம் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சிப் பெற்ற குடியாத்தம் வட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பாராட்டி ரோட்டரி சாசன ஆளுநர் கே.ஜவுரிலால் ஜெயின் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார்.

சங்கச் செயலர் ஜி.ராஜேந்திரன் முடிவில் நன்றியுரை ஆற்றினார் .

மேலும் சுற்று சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களின் பயண்பாட்டை
தவிர்க்க வலியுறுத்தும் பாதகைகளை குடியாத்தம் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் வழங்கும் திட்டத்தை குடியாத்தம் “கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சார்பில்” இன்று மாவட்ட வேலூர் முதன்மை கல்வி அதிகாரியிடம் ரோட்டரி சங்கதலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆகியோர் வழங்கினார்கள்

குடியாத்தம் கே.உமாசங்கர்

1,351 total views, 93 views today

Top

Registration

Forgotten Password?

Close