குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி ஊராட்சியில் நரிக்குறவர் குடியிருப்புகளை வேலூர் மாவட்ட ரோட்டரி ஆளுநர் திரு. ஜவரிலால் ஜெயின் அவர்கள் பார்வையிட்டார்..!

0
0

*குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி ஊராட்சியில் நரிக்குறவர் குடியிருப்புகளை வேலூர் மாவட்ட ரோட்டரி ஆளுநர் திரு. ஜவரிலால் ஜெயின் அவர்கள் பார்வையிட்டார்*.

குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி ஊராட்சியில் நரிக்குறவர் குடியிருப்புகளை வேலூர் மாவட்ட ரோட்டரி ஆளுநர் திரு. ஜவரிலால் ஜெயின நரிகுறவர் வசிக்கும் குடியிருப்புகளை பார்வையிட்டார்.
அனைத்து வீடுகளும் பழுதடைந்த நிலையிலும் குடியிருக்க முடியாத நிலையிலும் உள்ள வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டி நரிகுறவ மக்கள் கேட்டுக் கொண்டனர். அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் பார்வையிட்ட ரோட்டரி ஆளுநர் திரு. ஜவரிலால் ஜெயின் அவர்கள் நரிகுறவர் மக்களுக்கு புதிய இல்லம் கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் நரிகுறவர் மாணவர்கள் பயிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்று அம்மாணவர்களை நன்கு படிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
மற்ற வகுப்பு மாணவர்களையும் சந்தித்து பேசினார்.

குடியாத்தம் பகுதியில் பல பள்ளிகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளது போல் எங்கள் பள்ளியையும் தத்தெடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள் கோரிக்கை வைத்தார். தலைமை ஆசிரியரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என ரோட்டரி ஆளுநர் உறுதி அளித்தார் .பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நவீன சீருடை வேண்டும் என தலைமை ஆசிரியர் கேட்டார். பள்ளியில் பயிலும் 210 மாணவர்களும் இரண்டு ஜோடி சீருடை வழங்குவதாக அறிவித்தார். அந்த சீருடைகளை உடன் வழங்குவதாக தெரிவித்தார். ரோட்டரி ஆளுநர் வருகையின் போது குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் திரு. அண்ணாமலை அவர்களும் பங்கேற்றார்.பள்ளியின்சார்பில் தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள் ரோட்டரி ஆளுநரை மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றார்.

வரவேற்பு நிகழ்வில் பி.இ.சி.தனி பயிற்சி நிறுவன முதல்வர். த.முத்தரசன்,
பத்தலபல்லி ஊராட்சியின் சார்பில் திரு. சுதர்சன்
மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்.

செய்தியாளர்
உமாஷங்கர்

1,581 total views, 6 views today