குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி அரசு பள்ளியில் முப்பெரும் விழா!!

குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி அரசு பள்ளியில் முப்பெரும் விழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 02.02.2018 பிற்பகல் முப்பெரும்விழா நடைபெற்றது.

பள்ளியின் வெளிப்புறம் வண்ணம் அடிக்க நிதியுதவி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா!

மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச Spoken English பயிற்சி வழங்கும் விழா!

பள்ளி மேலாண்மை குழு &பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் சிறப்பு விழா!

பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி.சுமதி சுதர்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் வரவேற்பு ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களை மாணவர்கள் மலர் கொடுத்தும் நரிகுறவர்கள் மணிமாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வரவேற்றனர்.

நீண்ட காலமாக வண்ணம் அடிக்காத நிலையில் இருந்த பள்ளிகளுக்கு வண்ணம் அடிக்க உதவிடுமாறு தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் தன்னுடைய முகநூலில் அதனைப் பார்த்து திரு. த.முத்தரசன்,
பி.இ.சி,
தனி பயிற்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் ரூ.2000/

திரு. சு.ஜெகந்நாதன்
பாரதி வித்யாலயா நர்சரி பள்ளியின் தாளாளர் அவர்கள் ரூ.1000/-

பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக, பாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ஆசிரியர் திரு. கோ.ரவி அவர்கள் ரூ.4000/-

பள்ளி தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவருடைய பங்காக ரூ.3000/-

பள்ளியின் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) நிதி. ரூ.5000/-

என ரூ.15000/- மதிப்பில் வண்ணம் அடிக்க உதவியவர்களுக்கு நடைபெற்ற கூட்டத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச என்பதற்காக பி.இ.சி.தனி பயிற்சி கல்வி நிறுவனத்தின் முதல்வர் திரு. த.முத்தரசன் அவர்களால் வாரம் இருமுறை மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச SPOKEN ENGLISH பயிற்சி வழங்க பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல் கட்டமாக
4-ஆம் வகுப்பு
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி துவங்கப்பட்டது.
இப்பயிற்சியினை மேனாள் முதன்மை கல்வி அலுவலர் திரு. பி.சுப்பிரமணி அவர்கள் துவங்கிவைத்தார்.மேலும் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேச துணை புரியும் குறுந்தகடுகளையும் தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்களிடம் மாணவர்களுக்காக வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் 40 கும் மேற்பட்டோர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்
கே.உமாசங்கர்

597 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close