குடிநீர் பெறும் கிணற்றில் எலி, பூனை, நாய் விழுவதை தடுக்க கிணறு மேற்பகுதி வலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள குடிநீர் பெறும் கிணற்றில் எலி, பூனை, நாய், கீரிப்பிள்ளை ஆகிய உயிரினங்கள் விழுவதை தடுக்க கிணற்று மேற்பகுதியில் வலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

இந்தப் பகுதியில் சுமார் இரண்டு வருடகாலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் இல்லாததால் பல விவசாய நிலங்களில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் திறந்தவெளி கிணறு மூலம் நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் பெறும் கிணற்றில் பலமுறை எலி, பூனை, நாய், கீரிப்பிள்ளை ஆகிய உயிரினங்கள் கிணற்றில் விழுந்து இறந்து விடுகின்றன இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் மற்றும் பேதி,வாந்தி போன்றவை இதனால் ஏற்படுகிறது.

இதற்கு தகுந்த அதிகாரிகளிடம் கிணற்று மேற்பகுதி வலை அமைக்க பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது தண்ணீர் பிரச்சனை அதிகமாக நிலவி வரும் நிலையில் கிணற்றில் சில உயிரினங்கள் இறந்த நிலையில் கிடைக்கின்றன. இதனால் பொதுமக்கள் குடி நீர்க்கு பெரும் அவதிப்பட்டு வருகின்றன. இதற்கு தகுந்த அதிகாரி கிணற்று மேற்பகுதியில் வலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

894 total views, 3 views today