குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக திறக்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

    நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கெந்தளா கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஏற்ப்பட்ட குடிநீர் பிரச்சணை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி, பம்பு அறை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    பணிகள் நிறைவடைந்து ஓராண்டு காலமாகியும் குடிநீர் விநியோகம் இதுவரை செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகரட்டி பேரூராட்சியில் மனு அளித்தும் பணி முடிந்ததற்க்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே உடனடியாக இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையை பிறப்பிக்குமாறு கூறி இன்று அக்கிராம மக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

369 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply