சுதந்திரம் அடைந்த ஆண்டுமுதலாக மதம் மாறிய கிறிஸ்தவர்களை அரசு கிறிஸ்தவர்களாக அறிவித்து சட்டம் இயற்றி உள்ளது இந்த மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறிய காரணத்தினால் பிற்படுத்தபட்டவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காமல் உள்ளது கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் தங்களை பிற்படுத்த பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் செய்து வருகின்றனர் அதனடிப்படையில் இன்று தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் SC/ST பணி குழு அவர்களின் தலைமையில் அவரது அலுவலகத்தில் இந்த கருப்புதின போராட்டம் நடைபெற்றது.இதில் ஆன்லைன் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலித் கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், அதேபோல் தென்கரைக்கோட்டையில் கார்மேல் அன்னை ஆலயத்தின் முன்பு பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து தங்களை SC/ST பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கையில் கருப்பு கோடி ஏந்தியும் ,கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு தின போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 122 total views