பாலக்கோடு
தர்மபுரி மாவட்ட கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம் துவங்கி மாநில இணை பொதுச் செயலாளர் குமரவேல் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் இணையும் விழா நடைபெற்றது விழாவில் , தமிழ்நாட்டிலுள்ள கிராமிய கலைஞர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000 அனைத்து கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் மற்றும் நிவாரண நிதியாக ரூபாய் 10000 அரசு அறிவிக்க வேண்டும் அதுபோல இக்காலகட்டத்தில் கிராமியக் கலைஞர்களை குரானா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என கிராமிய கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இவ்விழாவில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பூபதி மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் மற்றும் தெருக்கூத்து சங்கத் தலைவர் கோபால் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 60 total views,  2 views today