காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அபுதாபி தமுமுக கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அபுதாபி தமுமுக கோரிக்கை

April 14, 2018 0 By குடந்தை யாசீன்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அபுதாபி தமுமுக கோரிக்கை

அபுதாபி மண்டல தமுமுகவின் செயற்குழு கூட்டம் 13/04/2018 வெள்ளிக்கிழமை மாலை முஸாபா சனையா பகுதியில் மண்டல தலைவர் அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கியது.

மவ்லவி முகைதீன் அன்வாரி அவர்கள் கிராஅத் ஓதினார். மண்டல தாவாக்குழு பொறுப்பாளர் சர்தார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல செயலாளர் சேக்தாவுது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மண்டல நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அமீரக தமுமுக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் அவர்கள் பல ஆலோசனைகளை வழங்கியதோடு நிர்வாகிகளின் கடமையும், பண்புகளும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.

மண்டல துணைச்செயலாளர் ஜஹாங்கீர் அவர்கள் நன்றியுரையோடு இறுதி துஆவோடு கூட்டம் முடிவுற்றது.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வருகின்ற ரமலானில் மே மாதம் -26 ந்தேதி இப்தார் நிகழ்ச்சியை சென்ற வருடத்தைவிட இன்னும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ICAD சிட்டியில் புதிய கிளை துவங்க அமைப்புக்குழு உறுப்பினர்களாக சகோ. முஹம்மது மன்சூர் மற்றும் சகோ. ஹாஜி அலி ஆகியோர் செயற்குழுவால் நியமனம் செய்யப்பட்டனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

முகம்மது அஸ்கர் அலி
துபாய் செய்தியாளர்

87 total views, 3 views today