கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி – உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸாருக்கு தொற்று உறுதியாகி மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்ற இடத்தில் அவருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில். நேற்று இரவு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கோவை கொடிசியாவில் உள்ள கொரானா சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடன் ப்ணிபுரிந்த மற்ற காவலர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

இதனால் கோவை உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் காவல் நிலையம் தற்காலிகமாக கோவை வின்சென் ரோட்டில் உள்ள நல்லாயன் சமூக கூடத்தில் செயல்பட ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.

 26 total views,  2 views today