காலி குடங்களுடன், கருப்புக்கொடி ஏந்தி கோவை சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாடுமுழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவைகளை சீராக வினியோகிக்கவில்லை இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டண ஆர்பாட்டங்கள் நடத்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உத்திரவிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.கார்த்திக் .அவர் வீட்டின் முன் கருப்பு கொடிகட்டி காலி குடங்களுடன். அரசு எதிராக கோசங்கள் எழுப்பி கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் பேசும்போது. கோவையில் பெருமளவில் கொரானா தொற்று பரவிவரும் நிலையில் முறையான முன்னெச்சரிக்கை இல்லாமலும், மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை சரியாக மக்களுக்கு அரசு வினியோகிப்பதுபில்லை. மேலும் கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவானி நீர்பிடிப்பு பகுதிகளில் அதன் கொள்ளளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.விதை கோவையில் உள்ள தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் கண்டுகொள்வது இல்லை இதனை உடனடியாக சீர்செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகத்தை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
பீளமேடு பகுதிக் கழகப் பொறுப்பாளர் மா.நாகராஜ், இலக்குமி இளஞ்செல்வி, அக்ரி பாலு, இளமதி.ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

 40 total views,  2 views today