காந்தி சிலையை சுக்கல் சுக்கலாக உடைத்த விசமிகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் காந்தி சிலை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் சுக்கல் சுக்கலாக அடித்து நொறுக்கினர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையிடம் முறையீடு செய்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவலதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்பாட்டுக்கு உரிய சில நபர்களின் நடமாட்டம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், காந்தி சிலை உடைக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

264 total views, 3 views today