*காட்பாடி திருவள்ளுவர் நகரில் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா*

 

காட்பாடி அடுத்த திருவள்ளுவர் நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெரும்பாலான கிருஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் சார்பில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது.இதில் தமிழர் திருநாளான பொங்கல்திருநாளை சமத்துவமாககொண்டாடினார்கள். அந்த பகுதியில் உள்ள இந்து முஸ்லிம் கிருஸ்தவர்கள் என ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இளைஞ்சர்கள் என தமிழகத்தின்பாரம்பரிய உடைகளை அணிந்து அனைவரும் பொங்கலிட்டுகுதுகலத்துடன் பொங்கலைகொண்டாடினார்கள். பொங்கல் பானையில் பொங்க வைக்க பட்ட பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என அனைவரும் பரவசத்துடன் கோஷமிட்டனர். பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாடன உறியடித்தல் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஜெயகாந்தன், எழிலரசன்,தமிழரசன்,பாலாஜி,குமரேசன்,முத்தமிழ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 

வேலூர் மாவட்ட ஒளிபதிவாளர்
வால்டர் மைக்கேல் உடன்
செய்தியாளர்
ஸ்டீபன் டேனியல்*

 828 total views