காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி

May 28, 2017 0 By BAHRULLA SHA

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் எவ்வளவு பிரபலமோ அதுபோலவே காஞ்சிபுரம் இட்லியும் பிரபலம்.
சாம்பார் இட்லி, நெய் இட்லி, அந்த இட்லி, இந்த இட்லி என்று எவ்வளவோ வகை வகையாக ஓட்டல்களில் பரிமாறினாலும், காஞ்சிபுரம் இட்லியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்தக் காஞ்சிபுரம் இட்லியை எப்படி சமைப்பது என்பதைப் பார்ப்போமா?
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
களைந்து சுத்தப்படுத்தி தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும், இதில் உப்பு, பெருங்காயத்தூள் கலக்கவும்.
7-8
மணி நேரம் புளித்துப் போக விடவும்.
பொடித்த மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்த மாவில் கலந்துகொள்ளவும்.
எண்ணெய் தடவிய 2 அங்குல ஆழத்தட்டில் பாதி அளவு மாவை ஊற்றி குக்கரில் வைத்து இட்லி வேக வைப்பது போல 10-15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
சிறிது நேரம் ஆறிய பின் இட்லியை எடுத்து சட்னியுடன் சாப்பிட்டால் தெரியும் காஞ்சிபுரம் இட்லி என்பது என்ன என்று.
இதில்சிலர்தேங்காய்துண்டுகளாக வேகவைத்து பருப்புகள் என சேர்த்து
செய்வதுண்டு.

7,226 total views, 3 views today